அதிர்ச்சியாக இருக்கிறது. இது என்ன மரணத்தின் விழாவா?
திரையுலகில் கருப்புப்போர்வையுடன் மரணதேவன் காத்திருக்கிறானா? என்ன கொடுமையடா?
யாரும் வெல்ல முடியாது என்பதினால் திமிருடன் அவன் அலைகிறானா?
நமது இயக்குநர் ,ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்தை கொண்டு சென்றுவிட்டான் அந்த கொடியவன்!
கனா கண்டேன், அயன், கோ, மாற்றான், காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கே.வி.ஆனந்த்.
குமார் வெங்கடேசன் ஆனந்த் என்பது பெற்றோர் வைத்த பெயர்.
பத்திரிகை புகைப்படக்காரர் , 90களில் ஒளிப்பதிவாளர்,
1994ஆம் ஆண்டு மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘தேன்மாவின் கொம்பத்’ படத்தில் முதன்முதலாக ஒளிப்பதிவாளராக அறிமுகம் . முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது கிடைத்தது.
.2005ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் கே.வி.ஆனந்த் இயக்குநராக அவதாரமெடுத்தார். 2009ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் அவர் இயக்கிய ‘அயன்’ படம் சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து 2011ஆம் வெளியான ‘கோ’ படத்தின் வெற்றி கே.வி.ஆனந்தை தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக முன்னிறுத்தியது.
இறுதியாக 2019ஆம் ஆண்டு சூர்யா நடித்த ‘காப்பான்’ படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
என் செய்வது விதி வலியது என்பதை இங்குதான் நம்ப வேண்டியதாக இருக்கிறது.