“ஐ லவ் யூ ? சொல்ல மாட்டாளா என்கிற தவிப்பு பல இளம் நடிகர்களுக்கு இருக்கிறது .
அந்த முச்சொல் மீது ஏனோ அப்படியொரு மோகம் அவர்களுக்கு.! அது ஹார்மோனின் உந்துதல்தான் .
இப்படியொரு நிலையில் தான் திரையுலக இளம் நடிகர்கள் இருக்கிறார்கள். இதானல்தான் அவர்கள் சீக்கிரமாகவே காணாமலும் போய்விடுகிறார்கள்.
சரி இந்த வியாக்கியானம் தற்போது எதற்கு என்கிறீர்களா?
கேரளாவின் முதல்வர் பினராயி விஜயனுக்கு நடிகையொருவர் “ஐ லவ் யூ ” சொல்லி இருக்கிறார்.
ஐ லவ் யூ என்றாலே காதலை மட்டும்தான் குறிக்கும் என்கிற தவறான எண்ணம் மக்கள் மத்தியில் உறைந்துகிடப்பதால் அப்படி தோன்றுகிறது.
“ஐ லவ் யூ “என்று அம்மாவிடமும் மகன் சொல்ல முடியும் . இடம் பொருள் ஆளைப் பொறுத்து லவ் அன்பாக மாறும்.காதலாகவும் மாறும்.
இங்கு பினராயி விஜயனை நோக்கி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஐ லவ் யூ சொன்னது ஏன்?
கொரானா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் கம்யூனிஸ்ட் கட்சி முதல்வர் எடுத்துவரும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை பார்த்து வியந்துபோய் அவர் பாராட்டி இருக்கிறார்.
“ஐ லவ் யூ சீப் மினிஸ்டர் ,நான் பொதுவானவள் ,எந்த கட்சியையும் சேராதவள் .நமது கேரளா மாநிலத்தின் நோய் எதிர்ப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளில் நீங்கள் எடுத்துவருகிற நடவடிக்கைகள் ,கவனம் ,அக்கறை என்னை வியப்பில் ஆழ்த்துகிறது .இந்த கடுமையான காலகட்டத்தில் உங்களின் செயல்பாடு பாராட்டுக்குரியது ” என்பதாக ஐஸ்வர்யா லட்சுமி கூறி இருக்கிறார்.
ம்ம்ம்ம் …எந்த நடிகையாவது நம்ம முதல்வர் பழனிச்சாமியை இப்படி பாராட்டியிருக்கிறாரா?