கேரளாவில் பேக்கரி கடை நடத்திவரும் (விஜய்) ஜோசப் குருவிலா மகள் பேபி (நைனிகா)யுடன் தனித்து அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார், விஜய்.இவருக்கு உதவியாளாக மொட்டை ராஜேந்திரன். நைனிகா படிக்கும் பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் எமி ஜாக்சன். டீச்சராக வரும் எமி ஜாக்சனுக்கு விஜய் மீது ஒருதலைக் காதல். ஒரு சின்ன பிரச்சனைக்காக எமி ஜாக்சன் காவல்நிலையம் செல்ல, விஜய்யின் நிஜப்பெயர் ஜோசப் குருவிலா இல்லை என்ற உண்மை தெரிய வருகிறது. அப்படியானால் விஜய் யார்? அவரது பின்னணி என்ன? எமி ஜாக்சனைப் போலவே நமக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ள,. மீதிப்படம் பாட்ஷா ,சத்ரியன்,என்னை அறிந்தால்,ஹானஸ்ட் ராஜா என பழைய கள்.புதிய மொந்தையாகி விடுகிறது! இந்த அரதபழசான கதையாலும், திரைக்கதையாலும் நூலறுந்த பட்டம் மாதிரி படம் ஆங்காங்கே அல்லாடுகிறது. விஜய் சில இடங்களில் ஒரே விதமாக பல்லைக்கடித்துக்கொண்டு டயலாக் பேசுவது எதோ தீராத வயிறு வலியால் துடித்து கொண்ருப்பவர் அவஸ்தையில் பேசுவது போலவே தெரிகிறது.
விஜய்,சாதுவாகவும், ஆக்ரோஷமாகவும் பல முகங்கள் காட்ட வேண்டிய கதாபாத்திரம்.ஆனால் வித்தியாசத்தை காட்டுகிறேன் என அவர் காட்டும் மேனரிசங்கள் படு ரோதனை!. சோர்வடைந்து விடும் நம்மை காப்பாற்றுவது துறுதுறுவென வரும் நைனிகாவும் அவரது நடிப்பும். இந்தப் படத்தின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் அவர் தான். சமந்தாவின் நடிப்பு கச்சிதம்! மொட்ட ராஜேந்திரன் நம்மை சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். இயக்குனர் மகேந்திரன். மகனை கொன்ற விஜய்யை பழிவாங்கும் வில்லன் கதாபாத்திரம் இவருக்கு! வித்தியாசமான வில்லனாகத் தெரிகிறார்.
வில்லனின் மகன் ஒரு பெண்ணை கற்பழிப்பதும், அவனை ஹீரோ அடித்துக் கொல்வதும், பதிலுக்கு வில்லன் ஹீரோவின் குடும்பத்தை நிர்மூலமாக்குவதும்.அட போங்கடா…! இந்த புராதன கதைதான் அட்லிக்கு கிடைத்ததா?முதல் படம் மவுன ராகத்தின் தழுவல் ,இது பல படங்களின் தழுவல்! கேட்டா,அட்லி கதை தழுவல் என்பது வேறு! இன்ஸ்பிரேசன் என்பது வேறு என வியாக்யானம் பேசுவார்! ஒளிப்பதிவாளரும், எடிட்டரும் சேர்ந்து இந்த பழைய கதைக்காக பெரும் பாடுபட்டிருக்கிறார்கள்.சுட்ட கதையை இன்னும் சுவாரசியமாக சொல்லியிருந்தால் ஒரு வேளை மனதை தொட்டிருக்கும். இத எழுதறதுக்குள்ள தாவு தீர்ந்து போச்சுடா சாமியோவ் ………………….!