நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான அஞ்சான் திரைப்படத்தில் நடிகை சமந்தாவின் அப்பா கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டியவர் பாலிவுட் நடிகர்பிக்ரம்ஜித் கன்வர்பால் (வயது 52).
இவர் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
நேற்று இயக்குநர் கே.வி. ஆனந்த் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில்,பாலிவுட் நடிகர் பிக்ரம்ஜித்தும் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளது பாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.