தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ம் தேதி நடந்தது. இந்நிலையில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.தற்போதைய நிலவரப்படி 234 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரமும் தெரியவந்துள்ளது. இதில், திமுக கூட்டணி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட திமுக கூட்டணி 156 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி77 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க போவது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில்,அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது டுவீட்டர் பக்கத்தில், “வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர். உங்கள் தலைமையின் கீழ் மக்களின் நம்பிக்கையை நாங்கள் பூர்த்தி செய்வோம். உங்களுக்கு எனது வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.
மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினு க்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டரில், “Good wishes and congratulations @mkstalin on your success in the Assembly election in Tamil Nadu. Wishing you and @arivalayam a good tenure in the service of the people. என வாழ்த்தியுளார்.
பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தனது டுவிட்டர் பதிவில், “திரு.ஸ்டாலின் பெற்றுள்ள மகத்தான வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். மதிப்பிற்குரிய கலைஞர் கருணாநிதியை போன்று நீங்களும் சமூக நீதியை முன்னெடுத்து சென்று திராவிட சகோதர, சகோதரிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்”. இவ்வாறு லாலு பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவி்ட்டரில். “ தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். அடுத்த 5 ஆண்டுகள் உங்களுக்கு சிறப்பாக அமையவும், மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் செயல்படவும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
உ.பி. முன்னாள் முதல்வர், அகிலேஷ் யாதவ், சிறப்பான வெற்றியை ஸ்டாலின் பெற்றுள்ளதாகப் பாராட்டியுள்ளார்.
பீகார் மாநில ராஷ்டிரிய ஜனத தள தலைவர் தேஜஸ்வி, முக ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.