சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் முதன் முறையாக போட்டியிட்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதிஸ்டா லின் அமோக வெற்றி பெற்றார்.இந்நிலையில் உதயநிதிஸ்டா லின் தன் ட்விட்டர் பக்கத்தில், எய்ம்ஸ் என எழுதப்பட்டுள்ள செங்கல்லை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குப் பரிசாக வழங்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் . அருகில் உதயநிதியின் மகன் இன்பா உதயநிதி உள்ளிட்ட மு.க.ஸ்டாலினின் பேரன், பேத்திகள் உள்ளனர்..இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்திய ஹைலைட்டான விஷயமே எய்ம்ஸ் செங்கல்தான் என்பது குறிப்பிடத்தக்கது .