கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சியின் தலைவர் கமல் ஹாசன்,பாஜக சார்பில் வானதி சீனிவாசன், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார், அமமுக சார்பில் துரைசாமி என்ற சேலஞ்சர் துரை, நாம் தமிழர் கட்சி சார்பில் அப்துல் வகாப் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே கமல் ஹாசன், காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்த நிலையில் திடீரென காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை பின்னுக்கு தள்ளி வானதி சீனிவாசன் 2 வது இடத்துக்கு முன்னேறினார்
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி 21 வது சுற்றில் கமல்ஹாசன் 41349 வாக்குகளும், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 40370 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் மயூராஜெய்குமார் 37347 பெற்றுள்ளனர்.
கமல்ஹாசன் – வானதி சீனிவாசன்- மயூராஜெய்குமார் ஆகியோருக்கு இடையே வாக்குகள் எண்ணிக்கையில் வித்தியாசம் அடிக்கடி மாறி வருவதால் இதில் வெற்றி யாருக்கு என்பது இன்னும் இழுபறியாக வே உள்ளது.அடுத்த 5 வது சுற்றில் தான் இவர்களில் வெற்றி யாருக்கு என்பது தீர்மானிக்கப்பட்ட உள்ளதால் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது