தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிட நிதிக்காக ஒருநாள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழர்களின் பாரம்பரியத்தை பறை சாற்றும் வகையில் மேளதாளம் ,கரகாட்டம் இடம் பெற்றது.
இதில் நடிகர்கள் , ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாலகிருஷ்ணா.ராஜேந்திர பிரசாத்,வெங்கடேஷ், உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நல வாழ்விற்காக நடிகர் சங்கம் சார்பில் ரூ 10 லட்சம் ரூபாயை ரஜினிகாந்த்,கமல்ஹாசன் இருவரும் இணைந்து வழங்கினர்.இதை தொடர்ந்து கமல் ஹாசன் டாஸ் செய்ததில் சூர்யா அனி பேட்டிங் வென்றது.ஆனால் சூர்யா சிவகார்த்திகேயனின் திருச்சி டைகர் அணிக்காக விட்டுக்கொடுத்தார். அதன்படி முதலில் பேட்டிங்கை திருச்சி அணிக்காக நடிகர் அசோக் செல்வன் தொடங்கினார் இரண்டு பந்துகளில்
மொத்தம் பத்து ரன் எடுத்து உதயா பந்தில் அவுட் ஆனார். இதையடுத்து சிவ கார்த்திகேயன் பேட்டிங் செய்தார். இதையடுத்து சூர்யா அணி ஆடத் தொடங்கியது ஆனால் வந்த வேகத்தில் சூர்யா அவுட் ஆகி வெளியேறினார்.இதையடுத்து கோவை அணியும்,ராம்நாத் அணியும் மோதின .ஒரு ஓவருக்கு ஐந்து பந்துகள் என நிர்னயிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியில் நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, ஜீவா, ஆர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான அணிகள் போட்டியிடுகின்றன. 1. ‘சென்னை சிங்கம்ஸ்’ : சூர்யா (கேப்டன்), விக்ராந்த், சிவா, உதய், நந்தா, அருண்விஜய், அர்ஜுன், நடிகைகள் ஹன்சிகா, கீர்த்தி சாவ்லா, கவுரி முன்சால், ருக்மணி, திவ்யா.2. ‘மதுரை காளைஸ்’: விஷால் (கேப்டன்). ரிஷி, சூரி, அருள்நிதி, ரமணா, ஆர்.கே.சுரேஷ், மன்சூர் அலிகான், நடிகைகள் வரலட்சுமி, ஜனனி ஐயர், மதுமிதா, சாந்தினி, நிக்கி கல்ராணி.
3. ‘கோவை கிங்ஸ்’: கார்த்தி (கேப்டன்). பரத், விஷ்ணு, சஞ்சய், மகேந்திரன், ஜே.கே.ரித்திஷ், பிரசாந்த், நடிகைகள் தமன்னா, மது ஷாலினி, சிருஷ்டி டாங்கே, மும்தாஜ், மிஷா, அபிநயஸ்ரீ.
4.‘நெல்லை டிராகன்ஸ்’: ஜெயம் ரவி (கேப்டன்), அரவிந்த்சாமி, விஜய் வசந்த், சவுந்தர்ராஜா, பிருத்வி, அஸ்வின் சேகர், சிபி, வைபவ், நடிகைகள் ஸ்ரீதிவ்யா, நமிதா, மனீஷா யாதவ், விஜயலட்சுமி, கோமல் சர்மா, பார்வதி நாயர்..
5. ராம்நாட் ரைனோஸ்: விஜய் சேதுபதி (கேப்டன்), ஜெய், கலை, போஸ் வெங்கட், வருண் ஐசரி கணேஷ், சக்தி, சிரீஷ், அருண்பாலாஜி, நடிகைகள் ரம்யா நம்பீசன், சோனியா அகர்வால்,வசுந்த்ரா, காயத்ரி, ரித்விகா.
6. தஞ்சை வாரியர்ஸ் : ஜீவா (கேப்டன்) லக்ஷ்மண், ஷரண், பசுபதி, அதர்வா, அசோக், பிளாக் பாண்டி, நடிகைகள் அமலா பால், தன்ஷிகா, புளோரா சைனி, நிகிஷா படேல், சஞ்சனா சிங்.
7. சேலம் சீட்டாஸ்: ஆர்யா (கேப்டன்) கார்த்திக் முத்துராமன், ஆதவ், உதயநிதி, உதயா, ஜித்தன், ரமேஷ், செந்தில், நடிகைகள் பிந்து மாதவி, நந்திதா, பூனம் கவுர், ரகசியா, சுஜா வாரூனி.
8. ‘திருச்சி டைகர்ஸ்’: சிவகார்த்திகேயன் (கேப்டன்), ஷாம், விக்ரம் பிரபு, அசோக் ஷெல்வன், ஹேமச்சந்திரன், நிதின் சத்யா, சதீஷ், ஸ்ரீமன் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், சாயாசிங், காயத்ரி ரகுராம், தேஜாஸ்ரீ, வேதிகா. ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
போட்டிக்கு நடுவே திரை நட்சத்திரங்களின் நடனம், மிமிக்ரி உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன
ரஜினிகாந்துக்கு மரியாதை: மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் மரியாதை செலுத்தும் விழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சங்கம்,தயாரிப்பாளர் சங்கம் பெப்சி அமைப்பு, இயக்குநர்சங்கம் உள்ளிட்ட அமைப்பு கள்
கலந்து கொண்டன முன்னதாக இன்று ஒரு நாள் அணைத்து படபிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன .