முரண்பாடுகளை முண்டாசாக கட்டிக்கொள்ளுவதில் ராம்கோபால் வர்மாவுக்கு முனைவர் பட்டமே கொடுக்கலாம்.
இந்த வவ்வாலுக்கு எவன்யா இன்விடேஷன் கொடுத்தான் என்று நோகும் அளவுக்கு அழையா விருந்தாளியாக வந்து கருத்துகளை அள்ளிவிடுவார்.
ஆனால் அவையெல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும்.! அவர் ‘ராங் கோபால் வர்மா ‘
அதில் ஒரு முரட்டுத்தனம் இங்கே!
இந்த பூமியில் எல்லாவற்றையும் படைத்தவன் கடவுள் ! எந்த கடவுள் அந்த படைப்பாளி என்பது நமக்குத் தெரியாது.
இந்த கோவிட் 19 கொடிய வியாதியை படைத்த கடவுள் யார் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியுமா? அவனுக்கு பதிலாக வேறு கடவுளை அடுத்த முறை நாம் தேர்ந்தெடுக்க முடியுமா?
அடுத்து சொல்லியிருப்பதை இங்கு நாம் சொன்னால் நம்மை ‘ஆன்ட்டி இண்டியன் ‘என்றோ கருப்புச்சட்டைக்காரன் என்றோ சொல்லிவிடுவார்கள். வேணாம்பா வம்பு!