தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். அவர் நிச்சயம் வெல்வார்.சட்டமன்றத்திற்குள் எம்எல்ஏவாக செல்வார் என்று அவரது கட்சியினர் மற்றும் ரசிகர்கள்,பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால்,இறுதியில் கடைசி கட்ட வாக்கு எண்ணிக்கையில் 1,728 வாக்கு வித்தியாசத்தில் எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றார் என்பதாக அறிவிக்கப்பட்டது..
இந்த நிலையில் கமல்ஹாசனின் தோல்வியை திரையுலகின் தோல்வி என பல திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது பாணியில் கமல் தோல்வி குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது,
“திரு கமல் அவர்களின் வெற்றி என்பது…. வெற்றி தோல்வி-எண்ணிக்கையில் இல்லாமல், தன்னம்பிக்கையில் மக்களுக்காக உழைக்க முன்வந்து, அரசியல் க(ள்)ளம் அறிந்தப் பின்(னும்)வாங்காமல், வெல்வதற்கு கூட்டு பொரியல் ஏதும் வைக்காமல் பேராண்மையுடன் நின்றதே.என குறிப்பிட்டுள்ளார்
,இப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.