நடந்து முடிந்த தேர்தலில் திமுகழகத்தை எதிர்த்த கட்சிகளில் மக்கள் நீதி மய்யமும் ஒன்று.
இந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பிற்பகல் திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லம் சென்று சந்தித்து வாழ்த்து சொன்னார் .இந்த சந்திப்பு குறைந்த நேரமே இருந்தாலும் நட்பு குறையாது கருத்துகளை பரிமாறிக் கொண்டார்கள் .
சந்திப்பின்போது சட்ட மன்ற உறுப்பினராக பொறுப்பேற்கவிருக்கிற உதயநிதிஸ்டாலினும் அங்கிருந்தார்.
களத்தில் கடுமையுடன் திமுகவுடன் மோதிய தேசிய முற்போக்கு திராவிட கழகத்தலைவர் விஜயகாந்தின் இல்லம் சென்று அவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் உதயநிதி ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தகுந்தது. கூட்டணி கட்சியின் தலைவர்களையும் சந்தித்தார் .