கொரானாவுக்கு பெரிய திரை என்ன ,சின்னத்திரை என்ன ,நாடாளும் மன்னனையே புரட்டிப்போடுகிற மகாசக்தி அந்த கொள்ளை நோய்க்கு இருக்கிறது. தற்போது சின்னத்திரை
அன்பே வா சீரியல் நடிகை டெல்னாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.. இதனை தொடர்ந்து தற்போது சுந்தரி சீரியல் கேப்ரியெல்லா செல்லசுக்கு கொரானா.
இதனால் சீரியலின் கதையே மாறி இருக்கிறது. வீட்டை விட்டு சுந்தரி வெளியேறிப் போய்விட்டதாகவும் அவளைத் தேடி குடும்பத்தினர் அழுது புலம்புவது போலவும் சித்தரித்திருக்கிறார்கள் .
தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கேப்ரியெல்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.
“ரொம்ப சாதாரணமாக நினைச்சிடாதீங்க மாஸ்க் போடாம வெளிய போகாதீங்க. பாதுகாப்பாக இருங்க. கடைசியா எனக்கும் கோவிட் கன்ஃபார்ம் ஆயிடுச்சு” என்று கூறியிருக்கிறார்