தலைவி பட நடிகை கங்கனா ரனாவத் .ஜெயலலிதாவாக நடித்துள்ள படம். இந்தப்படம் தயாராகி ரெடியாக இருந்தாலும் கொரானா காரணமாக திரைக்கு வரவில்லை. சரி, ஓடிடி யிலாவது வெளியாகுமா என்பதும் தெரியவில்லை.
ஆனால் கங்கனாவுக்கு கொரானா வந்து விட்டது.
டிவிட்டரில் கங்கனாவின் கணக்கு முடக்கப்பட்டுவிட்டது. இனவெறியை தூண்டிவிட்டதாக மேற்கு வங்க அரசு இந்த நடிகை மீது குற்றப்பத்திரிகை வாசித்திருக்கிறது.
இந்த நிலையில்தான் கொரானாவும் கங்கனா மீது பாய்ந்திருக்கிறது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும், ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே.!.
தற்போது நடிகர் விஜய் நடித்த ‘குஷி’ உள்பட ஒருசில தமிழ் திரைப்படங்களிலும் பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்த நடிகை ஷில்பா ஷெட்டியை தவிர அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.
கங்கனா என்ன சொல்கிறார்?
“கடந்த சில நாட்களாக என் கண்களில் லேசான எரிச்சல். உடல் சோர்வு. பலவீனமாகவும் உணர்கிறேன், இமாச்சலத்திற்குச் செல்வேன் என்று நம்புகிறேன், அதனால் நேற்று நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன் அதன் முடிவு இன்று வந்தது எனக்கு பாசிட்டிவ்.
“நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன், என் உடலில் இருந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி கொரோனவை எப்படியும் விரட்டி விடுவேன் என்பது எனக்குத் தெரியும், கொரோனாவை கண்டு பயப்படாதீர்கள். நீங்கள் பயந்தால் அது உங்களை மேலும் பயமுறுத்தும் , நாம் அனைவரும் இணைந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து இந்த கோவிட் -19 ஐ அழிப்போம், எனக்கு சிறிய காய்ச்சலைத் தவிர வேறொன்றுமில்லை, ஹர ஹர மகாதேவ, “என்று பதிவிட்டுள்ளார் .
தவத்தில் இருப்பது போன்ற யோகாசன படத்தையும் பதிவு செய்திருக்கிறார்.