திரை உலகில் வெற்றி பெற்ற நடிகைகளில் பலர் திருமணம் செய்து கொண்டு இல்லறவாழ்வில் சிறப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் வெகு சிலர் சிங்கிள் ஆகவே இருக்கிறார்கள்.
உதாரணமாக நர்கிஸ் பக்ரி ,தபு ,சாக்க்ஷி தன்வர் ,அமீஷா படேல் ,பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் ,நக்மா ,ஆஷா பரேக் , மேக்நா மாலிக் ,தெற்கில் திரிஷா,அனுஷ்கா ,கவுசல்யா ,தமன்னா ,ரகுல் ப்ரீத்திசிங் ,டாப்ஸி, சார்மி ஆகியோரை சொல்லலாம். இவர்களில் சிலர் வயது 40 ஐ கடக்காதவர்கள். சிலர் நெருங்கி கொண்டிருப்பவர்கள்.
சிலம்பரசனுடன் நடித்து தனது திரை உலக வாழ்க்கையைத் தொடங்கியவர் சார்மி.
இன்று தெலுங்கு உலகில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் .இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.ஆனால் முன்னணி இயக்குநருடன் இணைந்து வாழ்வதாக கிசு கிசு வந்தது.
சார்மி என்ன சொல்கிறார்.?
“நான் தற்போது எனது திரைப்படத் தயாரிப்பு தொழிலில் மிகச் சிறந்த கட்டத்தில் இருக்கிறேன். என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கையில் திருமணம் செய்துகொள்வது என்ற தவறை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்” என்கிறார் ” வதந்தியான செய்திகளைக் கேட்பதற்கு சுவாரசியமாக” இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.