விஜய் நடித்த கில்லி( ஆதிவாசி) ,மற்றும் டிஷ்யூம், தலைநகரம், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நகைசுவை மற்றும் சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளவர் நடிகர் மாறன்.(வயது 48). இவர் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு காரணமாக செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்,இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.