மாயா’ படத்தை தொடர்ந்து இயக்குனர் சற்குணம் தயாரிப்பில் அவரது உதவியாளர் தாஸ் இயக்கும் திகில் படம் ஒன்றில் நயன்தாரா நடிக்கவுள்ளார் இந்த படத்திற்கு ‘டிக் டிக் டிக்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதே பெயரில் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் ஒன்று கடந்த 1981ஆம் ஆண்டு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப் படத்தில் நயன்தாரா கதையின் நாயகியாகவும், ஹரிஷ் உத்தமன் போலீஸ் வேடத்திலும் நடிக்கின்றனர். மெர்வின் சாலமன் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.