தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று 2 வது அலை வேகமாக பரவி வரும் நிலையில்,. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன்கள் நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ரூ. 1 கோடிக்கான காசோலையை வழங்கினர்.