‘ராட்சசன் ‘ மற்றும் தனுஷ் நடித்த ’அசுரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை அம்முஅபிராமி .
சமீபத்தில் “இவர் தன்னுடைய ட்விட்டரில்,” கடந்த மே 3 ஆம் தேதி அன்று, தனக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துகொண்டதில் அவருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், இதனை அடுத்து மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் மேலும் மருத்துவர் பரிந்துரையின்படி மருந்துகளை எடுத்து வருவதாகவும் பதிவிட்டு இருந்தார்.
தற்போது கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமமடைந்து விட்டதாக நடிகை அம்மு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அம்மு அபிராமி தனது சமூக வலைதள பக்கத்தில் ,”கடவுள் அருளாலும், அனைவருடைய பிராத்தனையினாலும், பூரணமாக கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து விட்டதாகவும், கொரோனா சோதனையில் தனக்கு நெகட்டிவ் என வந்துவிட்டதாகவும், அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு, மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும், முடிந்த வரை வெளியில் செல்லாமல் வீட்டில் பத்திரமாக இருங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்