விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி உள்பட பலர் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘இறைவி’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்து நாயகன் விஜய்சேதுபதி கூறியதாவது: ஆண்களின் உலகத்தைச் சுற்றியிருக்கிற மனைவி, காதலி, சகோதரி, அம்மா என்று இவர்களின் கதையே இறைவி. நாம் கவனிக்காமல் விட்ட இவர்களின் மறுபக்கக் கதையே இப்படம். நாம் அவர்களை சரியாகக் கவனி்க்காமல் விட்டுவிட்டோமா என்று படம் முடிந்து வெளியே வரும் அனைவருக்குள்ளும் ஓர் ஆதங்கத்தை ஏற்படுத்தும். எத்தனையோ படங்களில் நடித்துவிட்டாலும், இறைவி முதல் காட்சியில் ரசிகர்களுடன் உட்கார்ந்து பார்க்கவேண்டும் என்பதே என் ஆசை’ என்கிறார். மேலும் ‘இறைவன்’ என்பதன் பெண்பால்தான் ‘இறைவி’ என்றும், இதுவரை தமிழ் சினிமா தொடாத கதைக்களம் ‘இறைவி’ படத்தின் கதை என்பதை தங்களால் அடித்து கூற முடியும் என்கிறது படக்குழு. இப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்