நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதிமய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐஜகே கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து பெரும் தோல்வியைத்தழுவியது.இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள்,கமீலா நாசர்,மகேந்திரன், பொன்ராஜ்,சந்தோஷ் பாபு மற்றும் பத்மபிரியா என பலரும் கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகி வருகின்றனர்.இது கமல் ஹாசனுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.இந்நிலையில் ‘வண்ணாரப் பேட்டை’,’திரௌபதி’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநரான மோகன் ஜி, தனது டுவிட்டரில், ” கமல் சார். சினிமாவில் நீங்க ஒரு வரலாறு. அதையே தொடருங்கள்.கொள்கை தெளிவில்லாத அரசியல் இப்படித்தான் இருக்கும். அரசியலை தூக்கி எறிந்து விட்டு கலை பயணத்தை தொடருங்கள்.. சென்னையில் ஒரு மாபெரும் படப்பிடிப்பு தளம் இல்லை.. இதற்காக போரடுங்கள்.. இதை செய்தாலே வரலாறு பேசும் உங்களை.. என குறிப்பிட்டுள்ளார்.இவரின் பதிவு சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.