ஆர் எஸ்.எஸ்.காரர்கள் மருத்துவமனைகளில் கொரானா நோயாளிகளுக்கு ஆக்சிசன் சிலிண்டர்களை கொடுத்து உதவுகிறார்கள் என்பதாக படத்துடன் பிரசாரம் செய்கின்றன பிஜேபியும் ,ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்.
ஆனால் அது உண்மை இல்லை.பொய்யான தகவலை பரப்புகிறார்கள் ,அது ஆக்சிசன் சிலிண்டர் இல்லை என பவன் வேங்கட சாய் என்பவர் டிவிட்டரில் பதிவு போட்டிருக்கிறார். பின் என்னவாம்?
அவரது பதிவில் என்ன சொல்கிறார் என்பதை பார்க்கலாம்.இவர் நடிகர் சிரஞ்சீவியின் ரசிகர்.காங்கிரஸ்காரர் என்பதையும் சொல்லிவிடுகிறோம்.
“அடடா எந்த அளவுக்கு இவர்கள் புத்திசாலிகள்!போட்டோவுக்காக இப்படியெல்லாம் செய்யலாமா? சிலிண்டரின் கலர் கூட தெரியாத புத்திசாலிகள்.!! அவர்கள் எடுத்து செல்வது நைட்ரஜன் , மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு சிலிண்டர்கள்” என்பதாக சொல்லியிருக்கிறார்.ஆக்சிசன் சிலிண்டரின் கலர் எப்படி இருக்கும்?பின் வரும் படத்தின் வழியாக சொல்லியிருக்கிறார்.கருப்பு கலர் வெள்ளை மூடி .
ஆஸ்பத்திரியாவது நிஜம்தானா?