தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது.அதிமுக எதிர்கட்சியானது. இது தேர்தலில் போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கடும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராய் விலகி வருகின்றனர்.
இந்நிலையில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சனம் ஷெட்டி,மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியவர்களை தனது டுவிட்டர் பக்கத்தில் விளாசித் தள்ளியுள் ளார்.
இது குறித்து சனம் ஷெட்டி பதிவிட்டுள்ளதாவது,”உங்கள் விசுவாசம் எங்கே போனது ? உங்கள் எல்லோருக்குமான என்னுடைய கேள்வி, நீங்கள் வெற்றி பெற்றிருந்தால் விலகியிருப்பீங்களா? மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகியவர்களே, நீங்கள் அக்கட்சிக்கும் கமல் சாருக்கும் மட்டும் நம்பிக்கை துரோகம் இழைக்கவில்லை. முதல் முறையாக உங்களை நம்பி வாக்களித்த பலரையும் ஏமாற்றி விட்டீர்கள்” என சற்று காட்டமாகவே பதிவிட்டுள்ளார்.
Where is ur loyalty??
My question to u all: would u still quit if u had won?
Resigned MNM party members have not only betrayed @maiamofficial party n leader @ikamalhaasan sir but mainly the people who voted for many 1st timers!#quitters #realfaces
https://t.co/phlZfN03sY— Sanam Shetty (@SamSanamShetty1) May 14, 2021