நடிகை திரிஷா துணிச்சலான பெண். இத்தனை ஆண்டுகளாக தமிழ்த்திரை உலகில் நாயகியாக இருப்பதே சவாலான காரியம்.
“முக்கியமான வேடமாக இருந்தாலும் தனக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டபின்னரே அந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்வார்.
இன்று வரை கதாநாயகியாக மட்டுமே நடித்துக்கொண்டு காதலையும் கடந்தபடி வாழ்கிற நடிகை திரிஷா.
இவரையும் ஆந்திரத்தின் பிரபல குடும்பத்தை சேர்ந்த நடிகர் ராணா டகுபதியையும் இணைத்து காதல் செய்திகள் கடந்த காலத்தில் பல ஊடகங்களில் பதிவானவை. பொய்யென மறுக்க இயலாது.
பிரபல தொழிலதிபரும் திரை உலக பிரமுகருமான ஒருவரை திரிஷா காதலித்ததும் ,அவருடன் தனி விமானத்தில் தாஜ்மகால் சென்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதும் ஊர் அறிந்த சேதி.
அவருடன்தான் திருமணம் என நிச்சயிக்கப்பட்டு பிராமண முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தும் மணமேடை காணாமலேயே அந்த காதல் திருமணம் முடிவுரை எழுதிக்கொண்டது.
கிட்டத்தட்ட 38 வயதாகிறது .
எப்போது கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்? யாரை திருமணம் செய்வார்?
முன்னர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.
“என் வாழ்நாள் முழுவதும் அவருடன்தான் வாழமுடியும் என்கிற நம்பிக்கையுடன் யாரை காதலிக்க முடியுமோ ,அவரை மணந்து கொள்வேன். எனக்கு டைவர்ஸில் நம்பிக்கை இல்லை. பல ஜோடிகளை பார்த்திருக்கிறேன் அவர்கள் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறார்கள். அப்படியெல்லாம் இருந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் இருக்கிறேன்.” என்றார் .