நடிகர் சங்க புதிய கட்டிடத்திற்கு நிதி திரட்ட தென்னிந்திய நடிகர் சங்கம் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில், நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்தியது. இதில்,சுதீப், பாலகிருஷ்ணா, மம்முட்டி, நிவின் பாலி, சிவராஜ்குமார், வெங்கடேஷ், நாகார்ஜூனா,ராஜேந்திர பிரசாத் என கேரளா,ஆந்திரா,கர்நாடகா மாநில நட்சத்திரங்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். அதே நேரம் அஜீத், விஜய், சிம்பு, சரத்குமார், ராதாரவி, ராதிகாஉள்ளிட்ட சில முன்னணி நடிக,நடிகையர் இப்போட்டியில் கலந்து கொள்ள வில்லை! இதுகுறித்து நடிகை ராதிகாசரத்குமார் தனது டுவிட்டரில் “இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் அனைவரையும் அழைத்திருந்தால் உங்களின் முதிர்ச்சி மற்றும் அனைவரிடமும் இணக்கமாக இருக்கும் தன்மை வெளிப்பட்டிருக்கும். இதைவிட பெரிய நிகழ்ச்சிகளை நாட்டிற்காகவும், நடிகர் சங்கத்திற்காகவும் அவர்கள் செய்திருக்கின்றனர். இது உங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. நீங்கள் என்னை அழைக்கவும் மறந்து விட்டீர்கள். சுவர் இல்லாமல் சித்திரம் இல்லை” என்று கூறியிருக்கிறார்.இச் சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.