“இந்த மடம் இல்லேன்னா ,சந்தை மடம்,சந்தை மடமும் இல்லேன்னா சத்திரம்”னு ஒரு சொலவடையை கேள்விப்பட்டிருப்போம்.
அந்த கதையாகிப்போச்சு. நடிகை இலியானாவின் நிலை.!
ரஷிய போட்டோகிராபரை விரும்பி காதலிச்சு வாழ்ந்தாங்க. வாழ்ந்த காலம் கொஞ்சம்தான். வசந்தம் முடிந்து விட்ட நிலை.
காதலனை கைவிட்டார். இவர் கை விட்டாரா,அல்லது அவர் கை கழுவினாரா என்பது தெரியாது.
பிரிந்தது உண்மை.
சேர்ந்து எடுத்துக்கொண்ட ஜில்லென்ற படங்களை எல்லாம் அழித்து விட்டார் இலியானா.
தற்போது தனித்த வாழ்க்கை.
திரையுலகம் திரும்ப அழைத்துக்கொள்ளும் ,அரவணைத்துக்கொள்ளும் என்றெல்லாம் கணக்குப்போட்டு கவர்ச்சிப்படங்களாக எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
ரசிப்பதற்கென்றே இருக்கிறவர்கள் கமெண்ட்ஸ்களை அள்ளிவிட்டார்கள்.ஆனாலும் வாய்ப்புகள் மட்டும் வாசல் கதவு வரை கூட வரவில்லை. தெலுங்கு ,தமிழ் படத் தயாரிப்பாளர்கள் இலியானாவின் கவர்ச்சிப்படங்களை ரசிப்பதாக இல்லை.
அதனால் சோர்ந்து விடவில்லை இலியானா.!
புதிய முடிவு எடுத்திருக்கிறார்.
கோவிட் 19 முடிவுக்கு வந்ததும் ரெஸ்ட்டாரண்ட் பல ,பேக்கரிகள் பல என திறக்க முடிவு செய்திருக்கிறார்.
நல்ல முடிவு.!