பாலிவுட் டிவியில் பிரபலமான நடிகை மூன் மூன் டட்டா .ஆனால் இவருக்கும் மூன் மூன் சென்னுக்கும் சம்பந்தமில்லை.
மூன் மூன் சென் திரைப்பட நடிகை.மூன் மூன் டட்டா தொலைக்காட்சி நடிகை.
இவர் எந்த நேரத்தில் கொட்டாவி விட்டாரோ ,சனியன் நாக்கில் குடியேறிவிட்டான்.
” யூ டியூப் வீடியோக்களில் நான் அழகுடன் தோன்றுவதையே விரும்புகிறேன்.’பங்கி ‘மாதிரியான தோற்றத்தில் இருக்கக்கூடாது.” என்று சொல்லிவிட்டார்.
‘பங்கி’ என்ற சொல் பிற்படுத்தப்பட்ட ஒரு பிரிவினரை குறிப்பதாகும். இந்த சொல்லை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. அதனால் நடிகைக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துவிட்டது.
மூன் மூன் டட்டாவை கைது செய்யச் சொல்லி பிரச்னை பெரிதாகிவிட்டது. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது .