கனவுக்கன்னி ,கண்களிலேயே காந்தம் வைத்துக்கொண்டிருக்கிற பேரழகு பெட்டகம் என்றெல்லாம் ரசிகர்கள் பாராட்டித்தள்ளுகிற நடிகைதான் ராஷ்மிகா மந்தனா .
கன்னடத்து பைங்கிளி .கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்தவர்.கிராமத்து அழகியாக வந்தவர் .அந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் தமிழ் மொழி பிடித்து விட்டது. கலாச்சாரம் பிடித்துப்போனது.
இவ்வளவு ஏன் ? மணந்தால் ஒரு தமிழரை மணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்கிற அளவுக்கு தமிழாநாட்டின் மீது காதல் கொண்டிருக்கிறார் .
“என்னை உண்மையிலேயே தமிழ் கலாச்சாரம் ஆட்கொண்டுவிட்டது. குறிப்பாக உணவு வகைகளும் பிடித்திருக்கின்றன.நான் தமிழரை கல்யாணம் செய்து கொண்டு தமிழகத்தின் மருமகள் ஆகவேண்டும் என்று விரும்புகிறேன்.”என்று கூறியிருக்கிறார்.
அண்மையில் தெலுங்கு நடிகர் விஜய தேவர கொண்டாவுடன் இவரை இணைத்து செய்திகள் வந்திருந்தன