
சென்னை கிரிக்கெட் அணியின் ( சி.எஸ்.கே .) டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ருத்துராஜ் கெய்க்வாட் .இவர் மீது மராத்திய நடிகை சாயாலிக்கு லவ்.
பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் என்றால் பாலிவுட் நடிகைகளுக்கு ஒருவித மயக்கம் உண்டு. காதலிப்பார்கள். டேட்டிங் செல்வார்கள்.கல்யாணம் செய்து கொள்வார்கள். நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. பேட்ஸ்மேன் ,பவுலர்ஸ் பலர் நடிகைகளிடம் விழுந்திருக்கிறார்கள். மூச்சு பிடித்து ஆடுகிற வலிமை மிகுந்தவர்கள். 
நம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை விரட்டி விரட்டி காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர் பாலிவுட் நடிகை தயாரிப்பாளர் அனுஷ்கா என்பது தெரிந்த விஷயம்தானே!
தற்போது சென்னை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ருத்துராஜ் . இவரை வீழ்த்துவது பவுலர்ஸ்களுக்கு அவ்வளவு ஈஸி இல்லை.
நடிகை சாயாலி தன்னுடைய இன்ஸ்ட்டாகிராமில் சில படங்களை பதிவு செய்திருந்தார்.
இதை பார்த்த ருத்துராஜ் “வாவ் ” என்று பாராட்டியிருந்தார்.
அவ்வளவுதாங்க. சாயாலிக்கு குஷி !
ஆர்ட்டின் ஈமோஜிக்களை பறக்கவிட்டிருந்தார்.
ஆகா ,காதல் வந்திருச்சு என்று நெட்டிசன்களுக்கு ஆனந்தம்.




