ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ள ‘வாகா ’படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடந்தது. டி.இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களை கமல்ஹாசன் வெளியிட, இயக்குன் மகேந்திரன் பெற்றுக் கொண்டார்.
முன்னதாக,விழாவில் இயக்குனர் மகேந்திரன் பேசுகையில்,‘‘இங்கு பேசிய பலரும் இப்போதுள்ள இயக்குனர்களுக்கெல்லாம் நான் தான் இன்ஸ்பிரேஷன் என்று என்னை ரொம்பவும் மிகைப்படுத்தியே பேசினார்கள். ஆனால் அவர்களுக்கு எல்லாம் நான் ஒரு உண்மையை இந்த மேடையில் தெரியப்படுத்த ஆசைப்படுகிறேன். இன்று இந்த மேடையில் நான் நின்று பேசுகிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் அந்த மகா கலைஞன் (கமல்ஹாசன்) தான்! நான் இயக்கிய முதல் படமான ‘முள்ளும் மலரும்’ படத்தை இயக்கும்போது அப்படத்திற்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டது. அப்படத்தின் எடுத்த சில காட்சிகளை தயாரிப்பாளருக்கு போட்டு காண்பித்தபோது, ‘படத்தில் வசனங்களே இல்லையா? என்ன எடுத்து வைத்திருக்கிறீர்கள்?’ என்று என்னை ரொம்பவும் கடிந்து கொண்டார். தொடர்ந்து அப்படத்தை எடுக்க முடியுமா என்ற குழப்பம் கூட ஏற்பட்டது. இன்று ம் பலராலும் பாராட்டப்பெறும் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் பாட லின் சில காட்சிகள் உள்பட படமாக்கப்பட வேண்டி இருந்தது. தயாரிப்பாளர் கை விரித்து விட்டதால் ,தொடர்ந்து அப்படத்தை எடுக்க முடியுமா என்ற குழப்பம் கூட ஏற்பட்டது. அப்போது அந்த படத்தை எடுத்து முடிக்க சொந்த செலவு செய்து எனக்கு உதவியவர் அந்த மகா கலைஞன் தான்! எடுத்த படத்தை அப்படியே விட்டுவிட்டு ஊருக்கு ஓடிப் போய் விடலாமா என்று யோசித்து கொண்டிருந்தபோது, எனக்கு தோள் கொடுத்தவர் அந்த மகா கலைஞனான கமல்ஹாசன் தான்! அன்று என்னை அவர் கண்டு கொள்ளாமல் இருந்திருந்தால் ‘முள்ளும் மலரும்’ வந்திருக்காது, இந்த மகேந்திரனும் இருந்திருக்க வாய்ப்பில்லை’’ என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் மகேந்திரன்