சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சந்தித்து. கொரோனா நிவாரண நிதியாக ரூ 50 லட்சம் வழங்கினார் இச்சந்திப்பு முடிந்து பத்திரிகையாளர்களிடம் ரஜினிகாந்த் பேசுகையில், ‘பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தவறாமல் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் அப்போது தான் கொரோனா தொற்றை முழுமையாக ஒழிக்க முடியும் என கேட்டுக்கொண்டார்.