துருவங்கள் பதினாறு படத்தின் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்த இளம் இயக்குனர் கார்த்திக் நரேன்.
தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் மாஃபியா படத்தை இயக்கி வெளியிட்டார் .
அதற்கு அதற்கு முன்பாக அரவிந்த்சாமி நடிப்பில் நரகாசுரன் படத்தையும் இயக்கியிருந்தார்.
இப்படம் தமிழ்த்திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்அப்படம் சில பிரச்சனைகள் காரணமாக வெளியீட்டில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தனுஷின் D43 என்ற பட த்தையும் இயக்கவுள்ளார் .
,சமூக வலைதளங்களின் மீது ஆர்வம் காட்டி வரும் கார்த்திக் நரேன் அவ்வப்போது தனது ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம். அவரது ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் மூலமாக பல கேள்விகளை கேட்டுள்ளனர்.
அதில் நடிகர் மகேந்திரன் ஒரு கேள்வி கேட்டிருந்தார்
“தனுஷின் 43 வது படப்பிடிப்பு எப்போது?நானும் அதில் இணையலாமா ?”என்கிற கேள்விக்கு, ‘மிக விரைவில் அண்ணா” என பதிலளித்துள்ளார்.
அரவிந்தசாமி நடிப்பில் உருவான நரகாசுரன் எப்போது வெளியாகும் அப்படம் வருமாவாராதா என பலரும் கேவி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலாக வடிவேல் மற்றும் கவுண்டமணி ஆகியோரின் காமெடி காட்சிகளின் டெம்ப்ளேட்டுகளை எடுத்து பதிவிட்டுள்ளார் .
” நரகாசுரன் தணிக்கை முடிந்து இன்னும் வெளிவரவில்லை என்பது மிகவும் கஷ்டமான விஷயமாக பார்க்கிறேன். ஒவ்வொரு படைப்பாளிக்கும் இது மிகவும் சோகமான விஷயம். இதையெல்லாம் கடந்து ஒரு கட்டத்தில் இந்தச் சூழலை ஏற்றுக்கொள்ளும் கட்டத்தில் நான் தள்ளப்பட்டு இருக்கிறேன் (இதுதான் இப்படத்தின் தலைவிதி என்பது) இந்த வருடம் எப்படியாவது நரகாசுரன் படத்தை வெளியிட வேண்டும் என்று அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். நல்லதே நடக்கும் என நம்புகிறேன்.என்கிறார்.