மேயாதமான்’படத்தின் மூலம்தமிழ்த்திரையுலகில் கதநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானிசங்கர். தொடர்ந்து,கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர், மாபியா, உள்ளிட்ட பட வாய்ப்புகளால், முன்னணி நடிகைகள் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார். தற்போது ’ஓ மணப் பெண்ணே’ ’இந்தியன்-2’ உள்பட சுமார் பத்து படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில்,பிரியா பவானிசங்கர் தன்னுடைய ஜிம் பயிற்சியாளர் ஜீவா என்பவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, (பிறந்த நாள் கேக்கை இருவரும் முகத்தில் பூசிக்கொண்டிருக்கும் புகைப்படம்) அதில், ’ஜீவா உங்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு உங்களுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமையும். பொதுவாக என்னை வேலை செய்ய வைக்கும் நபர்களை எனக்கு பிடிக்காது. ஆனால் எனக்கே உங்களைப் பிடிக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நீங்கள் என்னை ஃபிட்டாக மாற்றினீர்கள். என்னுடைய கலோரிகளும் எடையும் குறைந்தது உங்களால்தான்’ என்று பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது..