தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கொரோனா, நுரையீரல் தொற்று, உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது, இது குறித்து தேமுதிக தலைமைக்கழகம் கூறுகையில் விஜயகாந்த வழக்கமான பரிசோதனைக்காகவே சென்றுள் ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்கிறது.