ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் நமது நடிகர் தனுஷ்.
அவருக்கு எம்மாதிரியான கேரக்டர்?
மார்க் கிரேனி என்பவர் எழுதிய ‘தி கிரே மேன்’ என்கிற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது ‘தி கிரே மேன்’ .
மெகா பட்ஜெட் படத்தில் ரயான் காஸ்லிங், கிறிஸ் ஈவென்ஸ் ஆகியோருடன் வாக்னர் மவுரா, ஜூலியா பட்டர்ஸ் மற்றும் ஜெஸிகா ஹென்விக் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தில் கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் ரேயான் காஸ்லிங் நடிக்கிறார்.
அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ் நடித்துவருகிறார் . இப்படத்தை அந்தோனி ரூஸோ மற்றும் ஜோயி ரூஸோ சகோதரர்கள் இயக்கி வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வந்த நிலையில், தற்போது ஸ்பெயின் நாட்டில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
விரைவில் மற்றொரு நாட்டில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.இந்நிலையில் இந்த படத்தில் இந்திய நடிகையான ஐஸ்வர்யா சோனாரும் இணைந்துள்ளார். மராத்தியில் மிக ஹிட்டான காமெடி படமான கே ரி ராஸ்கலா படத்தில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா.
இந்த மராத்தி மொழி படத்தை தயாரித்தவர் பிரியங்கா சோப்ரா தான். ஐஸ்வர்யா நடிகை மட்டுமல்ல, தேசிய விருது பெற்ற வென்டிலேட்டர் படத்தின் டைரக்டர் ராஜேஷ் மபுஸ்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
தி கிரே மேன் படத்தில் மிக சிறிய ரோல் என்றாலும், முக்கியமாக ரோல் என்பதால் இப்படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ஒப்புக் கொண்டுள்ளார். இவர் நடிக்கும் காட்சிகளின் முதல் ஷாட் எடுக்கவே கிட்டதட்ட 6 மாதங்கள் ஆனதாம். தி கிரேமேன் படத்தில் தான் நடிக்கும் காட்சிகளை நடித்து முடித்து விட்டதாக கூறி உள்ள ஐஸ்வர்யா, அந்த ரோல் பற்றிய எந்த தகவலையும் வெளியிடவில்லை.