கேரளத்தில் இரண்டாவது முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி அமைந்திருக்கிறது. இந்த முறையும் பினராயி விஜயனையே முதல்வராக சி.பி.எம் நியமித்திருக்கிறது.
இன்று முதல்வர் பொறுப்பேற்றுக்கொண்ட முதல்வரை மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் தொலைபேசி அழைத்துப்பேசியிருக்கிறார் .தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் கூறி இருப்பதாவது;
என் நேசத்திற்குரிய தோழர் பினராயி விஜயன் கேரளத்தின் முதல்வராக இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுக்கொள்கிறார். நான் உத்தேசிக்கிற அரசியலுக்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்கிறவர்.நேர்மையான திறமையான நிர்வாகத்தினால் எந்த இடரையும் முறியடிக்கலாம் என நிரூபித்துக்காட்டிய நண்பரை இன்று போனில் வாழ்த்தினேன். அடுத்த ஐந்தாண்டுகளில் கேரளம் பட்டொளி வீசி பறக்கட்டும். இன்னும் இன்னும் சிறக்கட்டும்” என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து கூறியிருக்கிறார்.
கேரள முதல்வராக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் நேரில் சென்று வணக்கம் தெரிவித்து, வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. பதிலுக்கு பினராயி விஜயனும் வாழ்த்தும் நன்றியும் தெரிவித்துக்கொண்டார்.