தமிழில் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் மூலம் நடிகையாக மூலம் அறிமுகமானவர் கல்யாணி பிரியதர்சன. தொடர்ந்து புத்தம் புது காலை என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்துள்ள இவர் தற்போது சிம்புவுக்கு ஜோடியாக மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.தற்போது கொரோனா லாக்டவுன் என்பதால் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ள கல்யாணி பிரியதர்ஷன் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக வலம் வருகிறார்.
தற்போது லாக்டவுன் சமயத்தில் தன்னுடன் இருக்கும் புதிய நண்பரை தனது ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, இந்த லாக்டவுன் சமயத்தில் நான் வளர்த்து வந்த செம்பருத்தி செடி இப்பொழுது தினமும் பூக்கத் தொடங்கி விட்டது. எனவே தற்போதைக்கு இந்த செம்பருத்திப்பூ தான் என்னுடைய புதிய நண்பர். பழைய நண்பர்களை வெளியில் சென்று காண முடியாது. என அதில் பதிவிட்டுள்ளார்.