தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் குணசேகர் இயக்கத்தில் பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட ஐந்து மொழிகளில் உருவாகி வரும் சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சமந்தா.இந்நிலையில்,நடிகை சமந்தா முதல்முறையாக பாலிவுட்டில் ‘தி ஃபேமிலி மேன் 2’என்ற வெப் சீரிஸ் மூலம் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தினடிரைலரில் , சமந்தா தமிழீழ பெண் போராளிகளை நினைவு படுத்தும் வகையில், சீருடைஅணிந்து குண்டுகளை வெடிக்கும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. டிரெய்லரில் இலங்கை தமிழர்களையும், விடுதலைப்புலிகளையும் அவமதிக்கும் நோக்கில் தவறாக காட்சிகளை சித்தரித்து இருப்பதாக அப்படகுழுவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
இந்த தொடரை தடை செய்யக்கோரியும் கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும் தமிழில் சமந்தா நடித்து வரும் படங்களின் வெளியீட்டிலும் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது.இந்நிலையில் இந்த தொடரை தடை செய்ய க்கோரி மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சரான பிரகாஷ் ஜவடேகருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
அதில், சமூக வலைதளங்களில் உலா வரும் தி ஃபேமலி மேன் 2 தொடரின் டிரெய்லரில் தமிழர்கள் பயங்கரவாதிகளாகவும் , ஐஎஸ்ஐ ஏஜெண்டுகளுடன் தொடர்புள்ளவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதன் மூலம் தமிழ் ஈழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈந்த ஈழப் போராளிகளின் போராட்டங்கள் கொச்சைப்படுத்தப் பட்டுள்ளதாகவும், மேலும் இந்தத் தொடரை ‘அமேசான்’ ஓடிடி தளத்தில் ஒளிபரப்பினால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்பதைத் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் குறிப்பிட்ட வைகோ, தி ஃபேமலி மேன் 2 தொடரை ஒளிபரப்பைத் தடை செய்யா வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது போல் நாம் தமிழர் கட்சி சீமானும் இது தொடருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.