இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தை பெரும் அச்சறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது கொரோனாவின் 2 வது அலை. பலிஎண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருகிறது, இதையடுத்து இந்த பயங்கர தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு மீண்டும் முழு லாக் டவுனை அறிவித்துள்ளது .செய்வதறியாது திகைக்கும் மக்கள் அனைவரும் அச்சத்தில் வீடுகளுக்குளேயே முடங்கி கிடக்கின்றனர். நிலைமையின் தீவிரத்தை, பயங்கரத்தை இன்னும் சிலர் உணராமலும் உள்ளனர் என்பது தான் வேதனை.
இந்நிலையில், நடிகை ஹன்சிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘லாக்டவுன் மூட் ‘ என்ற தலைப்பில் ஒரு ‘ஜிப்’ வீடியோவை வெளியிட்டு, ‘லாக் டவுன் ரொம்ப கடுப்பா இருக்கு. ஆனா, என்ன செய்றது என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார். என்னம்மா செய்றது…. கூட்டம் சேராதே, கூட்டம் சேராதே, வெளியில போகும் போது முகத்துல மாஸ்க்கை போடு, மாஸ்க்கை போடுன்னா யார் கேட்கிறா?
View this post on Instagram