பாலியல் ரீதியான செய்திகள் சற்று அடங்கியமாதிரி இருந்தது. தற்போது உச்ச நடிகர் ஒருவரின் நெருங்கிய உறவுக்காரர் நடத்துகிற பள்ளியில் பாலியல் தொல்லைகள் தரப்படுவதாக புகார்கள் சமூக வலை தளங்களில் அடிபடுகிறது.
கே.கே.நகரில் பிரபலமான பத்மா சேஷாத்ரி பள்ளியில் கணக்கு பதிவியல் ,மற்றும் வணிகவியல் பாடம் எடுப்பவர் ராஜகோபாலன். இவர்தான் பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகளை கொடுத்து வருவதாக சொல்கிறார்கள்.
ஆபாச படங்களின் இணைய தள பக்கங்கள் அனுப்புவது ,ஆன் லைன் கிளாஸ்களில் அரை குறை ஆடையுடன் வருவது போன்ற புகார்களை முன்னாள் மாணவர்களும் சொல்லுகிறார்கள்.
ஆசிரியர் ராஜகோபாலனுக்கு எதிராக சோசியல் மீடியாக்களில் அரசியல் தலைவர்கள் ,சட்டமன்ற ,பாராளுமன்ற உறுப்பினர்கள் ,திரைத்துறையினர் நடவடிக்கை எடுக்க சொல்லி கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.