யாருக்குத்தான் சி எம் .ஆகவேண்டும் என்கிற ஆசை இல்லை? அதிலும் சற்று செல்வாக்கு இருந்து ,அது மிகுந்துவிட்டால் சி.எம் .ஆகியே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொள்வார்கள். அது போலத்தான் அண்டை மாநிலத்திலும் நடந்திருக்கிறது.
“அயம் உபேந்திரா. நான் இந்த மாநிலத்தின் சி.எம்.ஆக வேண்டும். நான் தேர்தலில் போட்டியிட்டால் என்னை தேர்ந்தெடுப்பீர்களா ?”என்று பிரபல கன்னட நடிகர் பகிரங்கமாகவே கேட்டிருக்கிறார்.
அதில் தப்பில்லை என்றுதான் தோன்றும். ஆனால் இந்த மனிதன் தன்னை ஒரு சிறந்த சினிமா நடிகன் என்று காட்டி விட்டார் ….!
முதலில் அவர் சொன்னதை தொடர்ந்து முடித்து விடுவோம்.
“நான் ஒரு சமூக சேவகன் என்பது உங்களுக்குத் தெரியும்.
உங்களின் வளமான எதிர்காலத்துக்காக நான் பாடுபடுவேன்.கர்நாடகாவை மிக சிறந்த மாநிலமாக மாற்றுவேன்.
நீங்கள் என்னை தேர்ந்து எடுப்பீர்களா ,மாட்டீர்களா என்பது தெரியாது. ஆனால் நான் தேர்தலில் நிற்கப்போவதில்லை.
அப்புறம் எதுக்குய்யா நமக்கு இந்த ‘உத்தம பிரஜாகிய கட்சி’ என்று கேட்கலாம்.
அந்த கட்சியானது தலைவர்களை உருவாக்குவதற்காக இல்லை. இங்கே மக்கள் சாதாரணமானவர்கள் ,அவர்கள் தேர்தலில் நிற்கிற அளவுக்கு பேமஸாக இல்லை.அவர்களை உங்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்தால் உங்களுக்காக பாடுபடுவார்கள். ஒவ்வொரு காசுக்கும் கணக்கு சொல்லுவார்கள் .
அவர்கள் நீங்கள் விரும்பிய அளவுக்கு செயல்படாவிட்டால் அவர்களை நீக்குவதற்கு இந்த உபேந்திரா உங்கள் பக்கம் இருப்பான். செயல்படாத பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக்கொள்கிற சட்டம் நமக்கு வேண்டும். அது கிடைக்கிற வரை இந்த நிரந்தரமான சி.எம் ( காமன்மேன் .) உங்களுடன் இருப்பேன்.
நான் உங்களில் ஒருவன் …என்ன ஓகேயா ?” என்று கேட்டிருக்கிறார்.
எப்பூடி இந்த சி.எம். !