விருதுகள் என்பது கேட்டுப் பெறுவதாக இருக்கக்கூடாது. அப்படி கேட்டு பெறுவது பிச்சை எடுப்பதற்கு இணையாகும்.
திறமைகளை அறிந்து உணர்ந்து தெளிந்து வழங்கப்படுவதே உயரியதாகும்.
அப்படி ஒரு அரிய விருதினை கேரளா அரசு, தமிழகத்தின் சிறந்த எழுத்தாளரும் ,கவிப்பேரரசு என கொண்டாடப்படுகிறவருமான வைரமுத்துவுக்கு வழங்கி கவுரவித்திருக்கிறது.
.மலையாளத்தில் சிறந்த கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குருப். அவரைக் கவுரவிக்கும் வகையில் அவரது பெயரால் 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது.
கேரளத்தில் சிறந்த பல எழுத்தாளர்கள் இந்த விருதினைப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு முதன்முறையாக மலையாள எழுத்தாளர் அல்லாத ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து, இந்த ஆண்டு ஓ.என்.வி. இலக்கிய விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வைரமுத்து இந்த விருது பெற்றுள்ளதை பாராட்டி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கை பின்வருமாறு:
