தமிழ்த் திரையுலகில் ‘தாடி’ வெங்கட் என அழைக்கப்படும் நடிகர் வெங்கட் சுபா. (வயது 61) இவர் பல்வேறு திரைப்படங்கள்,டி .வி.தொடர்களில் நடித்துள்ளார். திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொ ரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ‘தாடி’ வெங்கட் நேற்று நள்ளிரவில் 12.48 மணிக்கு காலமானார். இத்தகவலை அவரது நெருங்கிய நண்பரும்,படத் தயாரிப்பாளருமானஅம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.