“யோவ் , எங்கேர்ந்துய்யா இவ்வளவு கோடி ரூபாயை பொரட்டியிருக்காங்க. ஒரு 500 ரூபாயை பொரட்டுவதற்கே தாலி அந்த போகுது. அமிதாப் பச்சன் 31 கோடி ரூபாய்க்கு ஒரு அபார்ட்மெண்ட் வாங்கிருக்காராமே …! ஒரு சதுர அடி 60 ஆயிரமாம் என்று நம்மால் வாயைப் பிளக்கத்தான் முடியும். அதுவும் இந்த கொரானா காலத்தில் ஏழைகள் சோத்துக்கே லாட்டரி அடிக்கிறாங்க. பிஞ்சுபோன கூரைக்கு ஓலை வாங்கவே பிச்சை எடுத்தாகணும்”இப்படி பட்ட நிலையில் பணக்கார உலகம் சொத்துக்கு மேல் சொத்து சேர்க்க முடிகிறது.
இதுதான் இந்திய பொருளாதாரம்
மும்பை அந்தேரி பகுதியில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் 5184 சதுர அடியில் 31 கோடி ரூபாயில் அபார்ட்மெண்ட் வாங்கியிருக்கிறார் என செய்தி காதில் அறைகிறது.
டியூப்ளெக்ஸ் அபார்ட்மெண்ட் என அழைக்கப்படுகிற இந்த ஆடம்பர அபார்ட்மெண்ட் 27 ,28 ஆவது மாடியில் அமைந்திருக்கிறது. 6 கார் பார்க் வசதி.
கவர்ச்சிநடிகை சன்னி லியோன் 16 கோடியிலும் ,இயக்குநர் ஆனந்த் எல்.ராய் 25 கோடியிலும் ஆடம்பர அபார்ட்மெண்ட்ஸ் வாங்கியிருக்கிறார்கள்.
அரசும் வரிச்சலுகை. ! சமதர்மம்டா சாமி.!!