கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பை தொழிலதிபர் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டநடிகை காஜல் அகர்வால், மாலத்தீவுக்கு தேனிலவு சென்ற புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து வைரலாக்கினார்.
தேனிலவுக்கு பின் ‘’ஆச்சார்யா’’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், கொரோனா 2 வது அலை ஊரடங்கு காரணமாக வீட்டில் கணவருடன் ஜாலியாக பொழுதை போக்கி வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் அதிக ஆர்வம் காட்டிவரும் காஜல் அகர்வால் அவ்வப்போது தனது கவர்ச்சி மற்றும் கணவருடன் இணைந்த ரொமான்ஸ் புகைப்படங்களையம் பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது தனது கணவரின் அணைப்பில் மிகவும் நெருக்கமாக முத்தமிட்டுக்கொள்ளும் புகைப்படங்களையும் பதிவு செய்து வைரலாக்கியுளார் இந்த புகைப்படங்களை காஜல் பதிவு செய்த ஒரு மணி நேரத்தில் சுமார் 4 லட்சம் லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.