அமலாபால் நடித்த ’ஆடை’ மற்றும் வைபவ், ப்ரியா பவானிசங்கர் நடித்த ‘மேயாதமான்’ உள்பட ஒருசில படங்களை இயக்கியவர் ரத்தினகுமார். இவரது குடும்பத்தை சேர்ந்த15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை ஒட்டுமொத்தமாக 14 பேர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த 20 நாட்களாக தான் கடும் கடும் மன உளைச்சலில் இருந்ததாக தனது தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது தமிழ்த்திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அனைவரும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு விட்டதால் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக கூறியுள்ளார் இது குறித்து இயக்குனர் ரத்தினகுமார் டுவிட்டரில் கூறியுள்ளதாவது,” 15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தனர். கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது வீடு’இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் Hospitalize செய்யப்பட்டு தேரினர். கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது வீடு🙏 🙏
— Rathna kumar (@MrRathna) May 29, 2021