திருமணத்துக்காக கடத்தப்படும் பெண் மாறியதால் ஏற்படும் மனப் போராட்டமும், காதல் போராட்டமும் தான் ‘வெற்றிவேல்’ படத்தின் கதை. ஓய்வு பெற்ற பள்ளிக்கூட ஆசிரியர் இளவரசுவின் மூத்த மகன் பள்ளிப்படிப்பைக் கூட தாண்டாத சசிகுமார். நல்ல மனசுக்காரர். படிப்பு வராததால் உரக்கடை கடை வைத்திருக்கும் இவருக்கு, அதே பகுதியில் விவசாய கல்லூரிக்கு வரும் மியா ஜார்ஜ் மீது காதல் ஏற்படுகிறது.. மியாவும் அந்தக் காதலை சசிகுமாரிடம் சொல்லும் நேரத்தில், சசிகுமாரின் தம்பி வடிவில் வருகிறது சிக்கல். படிப்பு முடிந்து ஊருக்கு வரும் சசிகுமாரின் தம்பி, ஊர்ப் பெரிய மனிதர் பிரபு மகளைக் காதலிக்கிறான். விசயம் அறிந்த வாத்தியார் ராஜ மாணிக்கத்திடம்(பிரபு )பெண் கேட்டுப் போக , ” சாதி மாறி பெண் கொடுத்தால்என் குடும்பத்தின் மரியாதை போய்விடும் ” என்று பிரபு கண்ணியமாக மறுக்கிறார் .அதே நேரம் இளவரசுக்கும்,பிரபுவுக்கும் ஒருவர் மீது ஒருவர் மரியாதை உண்டாகிறது. .ராஜ மாணிக்கத்துக்கு அவமானம் ஏற்படும்படி எந்த செயலும் செய்யக் கூடாது என்று கூறும் வாத்தியார், தனது சின்ன மகனிடம் காதலை மறக்கச் சொல்கிறார் .இதையடுத்துவெற்றிவேல், தனது நண்பர்களான காதலுக்கு உதவி செய்யும் நாடோடிகள் நண்பர் குழுவோடு சேர்ந்து, தம்பியின் காதலியை கடத்த திட்டம் போடுகின்றனர். ஒரு திருவிழாவின் போது சசிகுமார் கடத்திவிடுகிறார்.ஆனால் தான் கடத்தியது வேறு ஒரு (நிகிலாபெண்ணை . (பிரபுவின் தங்கை விஜி சந்திரசேகர் மகனுக்கு நிச்சயிக்கப்பட்டவர்). என்கிற விஷயம் தெரிந்ததும், ஊருக்கு மீண்டும் நிகிலாவை அழைத்துப் போய் சமாதானப்படுத்திவிடலாம் என கூட்டிப் போகிறார் சசிகுமார். அதற்குள் நிகிலாவின் அப்பா அவமானத்தில் உயிரை விடுகிறார்.வாழ்க்கையே அலங்கோலமாகிவிட்ட நிலையில் நிற்கும் நிகிலா, போலீஸ் விசாரணையில், விரும்பித்தான் சசிகுமாருடன் சென்றதாககூறி அதிர வைக்கிறார். இதனால் வேறு வழியின்றி போலீசார் சசிகுமாருடனே, நிகிலாவை அனுப்பி வைக்கின்றனர் , இதையடுத்து என்ன நடக்கிறது என்பது தான் மீதிக் கதை
தம்பி ராமையா. (ஒத்தாசை) டெய்லர் கதாப்பாத்திரத்தில் வருகிறார். ‘வீட்டுக்குப் போய் சும்மாதான இருக்கபோற’ என்று அவரைப் பார்ப்பவர்கள் எல்லாரும் கலாய்க்க,அக் காட்சிகள் கலகலப்பூட்டுகிறது . சசிகுமார் வழக்கமான நடிப்பு , பெண்களைக் கவரும் வசனங்கள் என்று உற்சாகம் குறையாமல் நடிக்கிறார் . மியாஜார்ஜ், நிகிலா என இரு நாயகிகள். நடிப்பிலும் குறை வைக்கவில்லை. பஞ்சாயத்து தலைவராக வருகிற பிரபு, சாதிக்காக கவுரவம் பார்ப்பதும், மகளுக்காக இறங்கி வருவதும் என நடிப்பில் கண்ணியத்தை காட்டியிருக்கிறார். பிரபுவை பழிவாங்கத் துடிக்கும் தங்கை விஜி சந்திரசேகர், பையனுக்காக பொண்ணு கேட்டு செல்லும் இளவரசு என்று துணை நடிகர்களே படத்திற்கு கூடுதல் பலம். ஒளிப்பதிவு ,இசை ரசிக்க வைக்கிறது. பழையகதை என்றாலும் ஒரு தடவை பார்க்கலாம்!