‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார். ‘முண்டாசுப்பட்டி’ ராம்குமார்.ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஏ.ஆர்.கே சரவணன்.
ஆதி, முனீஸ்காந்த், நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்திருந்த ‘மரகதநாணயம்’ படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2017-ல் வெளியாகி இருந்த படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. வசூலும் கையை கண்டிக்கவில்லை என்கிறார்கள்.
வித்தியாசமான நகைச்சுவை கலந்த கதைக்களம் மற்றும் அட்வெஞ்ச்சர் த்ரில்லர் வகையிலான கதைக்கரு என ஜனரஞ்சகமான படமாக உருவாகி இருந்தது. இதையடுத்து இப்படத்தின் 2 ம் பாகம் உருவாகுமா என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.
மரகத நாணயம் படத்தின் 2வது பாகம் உருவாகுமா என்பது குறித்து மரகத நாணயம் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் தமது சமூக வலைப்பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
‘மரகதநாணயம் -2’பட த்துக்கான கதைக்கருவை தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறேன்.ஆனால்,அதற்கு முன்பு.சத்யஜோதி நிறுவனத்துடன் விரைவில் ஒரு படத்தைதொடங்க உள்ளேன்..இவற்றையெல்லாம் விட.. கொரோனாவிலிருந்து தமிழகம் விரைவில் மீண்டெழ வேண்டும் என்பதே என் பிரார்த்தனைகள் ” என பதிவிட்டு உள்ளார்.