தமிழ்த்திரையுலகில் நல்ல நடிகராக மட்டுமல்ல தயாரிப்பாளராகவும் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறவர் நடிகர் சிவகார்த்திகேயன், கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படங்களை தொடர்ந்து ‘வாழ்’ என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்த படத்தை ‘அருவி’பட இயக்குனர் அருண் புருசோத்தமன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து படத்திற்கு தணிக்கைத்துறையினரின் யு ஏ சான்றிதழும் பெற்றுவிட்டது. கொரோனா லாக்டவுன், காரணமாக இத்திரைப்படம் வெளியாவதில் தாமதம்.
தற்போது மீண்டும் இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் காலவரையறையின்றி மூடப்பட்டு விட்டதால் இயல்புநிலை எப்போது திரும்பும் என காத்திருக்கும் நிலை! . தற்போது இப்படத்தினை சிவகார்த்திகேயன் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது
.இதையடுத்து, இந்த படத்தின் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனதெரிகிறது.சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படமும் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.