இந்தியன்-2’பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும், இயக்குநர் ஷங்கருக்கும் இடையிலான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
தீர்ப்புக்காக அந்த படத்தின் நாயகன் கமல்ஹாசன் காத்திருக்கிறார்.
இந்தியன்-2 படத்தின் விவகாரத்திற்கு பின்பே தனது விக்ரம் படத்தின் பணிகளில் கமல்ஹாசன் ஈடுபட இருக்கிறார்.
.விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில் போன்ற நடிகர்களின் பக்காவான கால்ஷீட் தேதிகள், கமலின் ஆலோசனைப்படி மாற்றியமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விக்ரம் படத்தின் ஸ்கிரிப்டுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பலரும் தயார் நிலையில் இருக்கிறார்கள்.,
‘இந்தியன் 2’ குறித்த சரியான தீர்ப்பை அறிய இன்னும் சில வாரங்கள் காத்திருக்குமாறு இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கமல் ஹாசன் கூறியதாக இயக்குனர் வட்டாரம் தெரிவிக்கிறது.
இந்தியன்-2 தொடர்பான வழக்கில், நீதிமன்றம் இயக்குனரை ஷங்கரை உடனடியாக மீண்டும் இந்தியன் படத்தை தொடங்க உத்தரவிட்டால், கமல் தனது விக்ரம் படத்துக்காக ஒதுக்கிய தேதிகளை இந்தியன் 2 படத்துக்கு ஒதுக்குவார். இல்லையெனில், அவர் விக்ரம் படப்பிடிப்பை உடனடியாக தொடங்கி விடுவார் என்கிறார்கள்.
இதே போன்று,இயக்குநர் ஷங்கரும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கிறார். கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு, இயல்பு நிலை திரும்பியவுடன் , ராம் சரண் மற்றும் தில் ராஜு ஆகியோரின் படப்பிடிப்பைத் தொடங்குவதாக ஷங்கர் உறுதியளித்துள்ளாராம்.