கலீல் ஜிப்ரானின் அற்புத வரிகள் நினைவுக்கு வருகின்றன.
முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனின் மீது திரைப்பட நடிகை சாந்தினி காவல் துறை அதிகாரிகளிடம் கொடுத்திருக்கிற புகாரினை அறிந்த போது அந்த மாபெரும் கவிஞனின் நினைவு வந்து விட்டது.
“காதலை வேண்டி நின்று ,காமத்தைப் பெற்றவன் வாழ்க்கை எவ்வளவு கரடு முரடானதாக இருக்கும்.”
உண்மைதான்.!சாந்தினியின் புகார் மீது விசாரணை நடத்துவதற்காக முன்னாள் அமைச்சரை காவல் துறை தேடிய நிலையில் அவர் காணாமல் தலைமறைவாக இருக்கிறார் என்கிறது செய்தி.
சில பெரிய மனிதர்கள் இத்தகைய சூழலில் எங்கிருக்கிறார்கள் என்பது தெரிந்திருந்தாலும் காவல்துறை காட்டிக்கொள்வதில்லை. இது அவர்களது ‘ஏரியா தர்மம்.’!
நடிகை சாந்தினியின் பூர்வீகம் என்ன?
இவர் மலேசியாவை சேர்ந்தவர். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்சென்னையில் தங்கி இருக்கிறார்.
மலேசியா சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சாந்தினி பணிபுரிந்தபோதுஅடிக்கடி இந்தியா வந்து செல்வாராம்.அப்போதுதான் மணிகண்டனுக்கும் சாந்தினிக்கும் காதல் ஏற்பட்டிருக்கிறது.
இனி சாந்தினியே பேசுகிறார் கேளுங்கள்.!
” எனக்கு அவர் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொள்வார். நான் அழகாக இருப்பதாகவும் , என்னை மிகவும் பிடித்திருப்பதாகவும் என்னை கல்யாணம் செய்து கொள்வதாகவும் கூறினார்.
கடந்த 5 வருடமாக நானும், முன்னாள் அமைச்சர் மணிகண்டனும் காதலித்து வந்தோம்., அதை நம்பி அவருடன் நெருக்கமாக பழகி மூன்று முறை கருவுற்றேன். பின்னர் அவரின் வற்புறுத்தலால் கருவை கலைத்தேன்.
திருமணம் செய்து கொள்வதாக சொல்லி என்னை ஏமாற்றிவிட்டார்.கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று அவரிடம் சொன்னால் கூலிப்படை வைத்து மிரட்டுகிறார்.
எனது அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டுகிறார்” என்று கூறுகிறார் சாந்தினி.
.இதையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
” கட்டாய கருக்கலைப்பு செய்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆனால் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி வசந்தி, ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் என் கணவர் மீது பொய்யான குற்றச்சாட்டை நடிகை சாந்தினி கூறியுள்ளார். இதனால் எனக்கு மன உளைச்சலை ஏற்பட்டுஇருக்கிறது நடிகை சாந்தினி மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த புகாரில் வசந்தி கூறியுள்ளார்.
நல்ல முன்னுதாரணம் தாயி.!